பிரித்தானிய செய்தி
லண்டன் : மொபைல் போன் நிறுவனத்தில் மோசடி
[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 08:50.34 மு.ப GMT ]

பிரிட்டனில், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக மொபைல் போன் நிறுவனம் பெரியளவில் பண மோசடிசெய்தது தொடர்பாக, கிழக்கு மிட்லாண்ட் நகரில் வசிக்கும் ஆசியாவை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த மூன்று மொபைல் போன் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு,"மொபைல் போன் ஏர்டைம் ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டதும், அவர்கள் இலவசமாக பேச ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கான பணத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்து, ஏராள மான பணத்தை மோசடி செய்தன.

இது தொடர்பாக, இரண்டு நிறுவனத்தின் இயக்குனர்களான, ஆசியாவை சேர்ந்த தொழிலதிபர்களான அல்டாப் மாஸ்டர் என்பவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும்,இம்ரான் பட்டேல் என்ப வருக்கு 51 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில்,பட்டேல் ஆறு மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவர் 200 மணி நேரம், சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டும் என்றும், லீசெஸ்டர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் திருப்பித் தரப்படாமல் மோசடி செய்தது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், பெரியளவிலான தொகை, மூன்று கம்பெனிகளுக்கு இடையே பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. கடந்த 2008ம் ஆண்டு, ஒரே பரிவர்த்தனையில், 1.74 கோடி ரூபாய் அளவிலான பணம் பிரிட்டனில் இருந்து சீனாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதுவரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து இது தொடர்பாக 300 புகார்கள் வரை வந்துள்ளன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]