| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெ. பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன்! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:53.50 மு.ப GMT ] |
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் இருவர் காயமடைந்தனர்.அமெரிக்க இராணுவத் தலைமை அலுவலகமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனை ஒட்டி உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்துக்கு மொத்தம் 5 பிரதான நுழைவாயில்கள் உண்டு. இதில் ஒரு வாயில் மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டி உள்ளது.
இங்கு நேற்று மாலை 6.40 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் வந்தார். வாசலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று உள்ளே செல்ல வேண்டும் என்றார். அவரிடம் இதற்கான அனுமதி அட்டைகளை கேட்டனர்.
அப்போது அவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தானியங்கி கைத்துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 2 அதிகாரிகள் குண்டு பாய்ந்து கீழே சாய்ந்தனர்.
உஷார் அடைந்த மற்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நோக்கி சுட்டனர். அதில் அவர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனே அவரை மடக்கிப் பிடித்தனர்.
காயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 இராணுவ அதிகாரிகளும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டனர். மர்ம வாலிபர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
அவர் யார்? எதற்காக சுட்டார் என்பது தெரியவில்லை. அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது பற்றி அமெரிக்கப் பொலிசார் எந்தத் தகவலையும் வெளியிட மறுத்துவிட்டனர். அந்த நபர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|