| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 07:14.09 மு.ப GMT ] |
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். லோட்டரோ தம்பதியினர் உலகம் வெப்பமயமாவதால் விரைவில் உலகம் அழிந்து விடும் என பயந்தனர்.எனவே உலகம் அழியும் போது அதில் சிக்கி பலியாகி விடக்கூடாது என பயந்த அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் தங்கள் இரு குழந்தைகளையும் சுட்டு விட்டு தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் 2 குழந்தைகளையும் சுட்டதில் ஆண் குழந்தை மட்டும் உயிரிழந்தது. 7 மாத பெண் குழந்தை நெஞ்சில் குண்டு பாய்ந்து இருந்தது. ஆனாலும் உயிரிழக்க வில்லை.
3 நாட்களுக்கு பிறகுதான் போலீசாருக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது பெண் குழந்தை மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
இந்த தம்பதினர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதம் ஒன்று அருகில் இருந்தது. அதில், உலக வெப்பமாயமாவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|