| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| சிலி நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:08.48 பி.ப GMT ] |
சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் போது பூமியில் உள்ள பாறைகள் இடம்பெயரும். இதன் காரணமாக பூமி சுழலும் வேகம் மாறுவதால், ஒருநாளின் கால அவகாசமும் மாறுபடும்.
நாசாவில் பணியாற்றும் புவியியல் விஞ்ஞானி ரிச்சர்ட் க்ராஸ் என்பவர் கணினியின் உதவியுடன் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8. ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோடு 8 செ.மீ. சாய்ந்துள்ளதையும், இதன் காரணமாக நாளின் காலஅவகாசம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவு குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளார்.
கடந்த 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தது. அதனால் நாளின் காலஅவகாசம் 6.8 மைக்ரோ செகண்ட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பகுதியே மைக்ரோ செகண்ட் எனப்படும். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|