| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| ரஷியாவில் காட்டுக்குள் அனாதையாக நின்ற 200 போர் டாங்கிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:42.03 மு.ப GMT ] |
உலகில் உள்ள மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்று. இந்த நிலையில் ராணுவத்துக்கு சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின் அருகேயுள்ள ஒரு காட்டில் அனாதையாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது.இதை ஒரு பத்திரிகை நிருபர் போட்டோ எடுத்து அதை ஒரு இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த டாங்கிகள் டி.80 மற்றும் டி.72 ரக போர் டாங்கிகளாகும். கடந்த 4 மாதங்களாக இவை பனி மூடிக்கிடந்தது. கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து தற்போது பனி உருகி வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
இவை ரஷிய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும். இந்த டாங்கிகள் அனைத்தும் அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தது, இதை ஓட்டி வந்து இங்கு நிறுத்தியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராணுவ அதிகாரிகளின் துணையுடன் இவை அங்கு கடத்தி வரப்பட்டதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை ராணுவ கமாண்டர் மறுத்துள்ளார். ரஷிய ராணுவத்தில் உள்ள 20 ஆயிரம் பழைய ரக டாங்கிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக அவை இங்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|