| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| எயிட்ஸ் நோயினால் அதிகளவு பெண்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர் |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:14.07 மு.ப GMT ] |
எயிட்ஸ் நோயினால் அதிகளவான பெண்கள் வருடாந்தம் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.குறைந்த வயதில் நோயினால் உயிரிழக்கும் பெண்களில் அதிகமானவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எயிட்ஸ் நோய் தொடர்பில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் பத்து நாள் கருத்தரங்கின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெண்களை அதிகளவு ஆபத்தில் சிக்க வைக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான திட்ட வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதிலும் 70 வீதமான பெண்கள் பாதுகாப்பாற்ற பாலுறவை மேற்கொள்ள பலவந்தப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெண்களுக்கு உரிய சமத்துவம் வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|