| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| புயற் காற்றுடன் கூடிய காலநிலையினால் ஐரோப்பாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:53.25 மு.ப GMT ] |
புயற் காற்றுடன் கூடிய மோசமான காலநிலையினால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புயற் காற்றின் மூலம் பிரான்ஸ், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தப் புயற் காற்றின் சீற்றம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் மட்டும் சுமார் 45 பேர் மோசமான காலநிலையினால் உயிரிழந்துள்ளனர். இந்த மோசமான காலநிலை ஜெர்மனிய மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளையும் தாக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்கரை நகரங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது, வெள்ளம் மற்றும் புயற் காற்றில் சிக்கிக் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மோசமான காலநிலையினால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது உயிரிழப்புக்கள் குறித்த பூரண தகவல்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை. அநேகமான பகுதிகளில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|