| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:20.37 பி.ப GMT ] |
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது.
தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர்.
இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து செல்கின்றனர்.
இச் சம்பவம் பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பா கண்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|