| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| நைஜீரியா : மதக்கலரவத்திற்கு 500 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 01:08.32 பி.ப GMT ] |
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஜோஸ் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்வது உண்டு.
இந்நிலையில் நேற்றிரவு இங்குள்ள இரண்டு கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள், வீடுகளில் நுழைந்து அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
கலவரக்காரர்களால் வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இதில் சுமார் 500 க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக உள்ளூர் மனித உரிமை குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கலவரம் வெடித்த பகுதிகளில் காவல் துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமைதியை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நைஜீரிய அதிபர் பொறுப்பில் உள்ள ஜோனாதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|