| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| துருக்கியில் பயங்கர பூகம்பம் : 17 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 12:59.06 பி.ப GMT ] |
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.இதனால் வீடுகள் குலுங்கின. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பீதி அடங்காமல் நீண்ட நேரம் ரோடுகளில் அமர்ந்திருந்தனர்.
பூகம்பம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் காந்திலி பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாஸ்யுர்த்- கரகோகனை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பூகம்பத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. பின்னர் இதில் வீடுகள் இடிந்ததில் 17 பேர் பலியானதாகவும், 20 பேர் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் சாவு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
துருக்கியில் கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் பலியாகினர்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|