| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு? |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:14.35 பி.ப GMT ] |
இந்த ஆண்டு இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.இத்தாலியிலின் புகழ்பெற்ற இதழ் வயர்டு இத்தாலி. உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவதில் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிப்பதாக அது தெரிவித்துள்ளது. மகத்தான சேவையைப் பாராட்டி, இன்டர்நெட்டுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக, இன்டர்நெட் பார் பீஸ் என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இன்டர்நெட் ஆற்றி வரும் பங்கு குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்படும். இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் வரை தொடரும். இதுகுறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இன்டர்நெட் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மத, இன வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைக்கிறது என வயர்டு இத்தாலி பத்திரிகை ஆசிரியர் லுனா தெரிவித்துள்ளார்.
இதுதவிர, 2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபடி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான உம்பெர்டோ வெரோனெசி ஆகியோரும், இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|