| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் அல்-கய்டா : ஒபாமா |
| [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:11.17 பி.ப GMT ] |
அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதில் அல்-கய்டா உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ‘யூ டியூப்’ (YouTube) இணையதளத்திற்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில்,
“அல்-கய்டா போன்ற குறிப்பிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவே நாங்கள் (அமெரிக்கா) போர் தொடுத்து வருகிறோம். அமெரிக்கா, நட்பு நாடுகள், ராணுவ தளங்கள், தூதரக அலுவலகங்கள் என உலகம் முழுவதும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆனால் இத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் உயிரிழக்கின்றனர் என்பதுதான் சோகமான விடயம். எனவே அல்-கய்டாவை ஒழிப்பதே எங்கள் முக்கிய இலக்கு. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தரப்பிலும் போராடுவதே அமெரிக்காவின் பணி. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஸ்திரமான முறையில் போராடி வருகிறோம். தற்போது ஏமன், சோமாலியா நாடுகளில் தங்களின் செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை நேச நாடுகளின் உதவியுடன் ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|