| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| சிகரெட் வெடித்ததால் வாயில் 51 தையல் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:04.09 பி.ப GMT ] |
இந்தோனேஷியாவில் ஒருவர் பிடித்த சிகரெட் திடீரென வெடித்ததால் அவரது 6 பற்கள் கீழே விழுந்ததுடன், வாயில் 51 தையலும் போடப்பட்டது.ஜகர்த்தாவில் வசித்து வரும் அண்டி சுசந்தோ (31) என்பவர் சிகரெட் பிடித்தபடியே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாயில் இருந்த சிகரெட் திடீரென வெடித்தது. இதில் அவரது ஆறு பற்கள் கீழே விழுந்ததுடன், வாயும் சின்னாபின்னமாக பிளந்துவிட்டது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வாயில் 51 இடங்களில் தையல் போடப்பட்டது.
தனது பள்ளி பருவத்திலிருந்தே சிகரெட் பிடித்து வருவதாகவும், தற்போது நிகழ்ந்த சம்பவம் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் சுசந்தோ கூறியுள்ளார்.
இதனிடையே இந்தோனேஷியாவைச் சேர்ந்த 'நூஜாரானோ டொபாக்கோ' என்ற நிறுவன தயாரிப்பு சிகரெட்டைத்தான் சுசந்தோ பிடித்ததாகவும், எனவே அந்நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுசந்தோவின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
ஆனால் அவ்வாறு நஷ்ட ஈடு ஏதும் தர முடியாது என்றும், தங்கள் நிறுவன தயாரிப்பு சிகரெட்டில் வெடி பொருட்கள் ஏதும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் சிகரெட் எதனால் வெடித்தது என்ற காரணத்தைக் கண்டறிய காவல் துறையினர்தான் மண்டையை பிய்த்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|