| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஈரானில் துவக்கம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:52.01 மு.ப GMT ] |
ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.தரையிலிருந்து விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கும் "காயெம்' என்ற ஏவுகணை, ஹெலிகாப்டர்களைத் தாக்க வல்லது. இதையும், தரையிலிருந்து கிளம்பி, தரையிலக்கைத் தாக்கும் "டூஃபான்' ஏவுகணையையும்,இம்மையங்கள் உற்பத்தி செய்யும். ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் 31-வது ஆண்டு நிறைவை ஒட்டி, இத்த ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த புதனன்று, உயிருள்ள ஆமைகள், எலிகள், புழுக்கள் கொண்ட ஆய்வுக்கலனுடன், "கவோஷ்கர் 3' என்ற ஆய்வு ராக்கெட்டை, பரிசோதனை முயற்சியாக ஈரான் விண்ணுக்கு செலுத்தியது. உயிருள்ள பிராணிகளுடன் ராக்கெட் அனுப்பி மூன்று நாட்களே ஆன நிலையில் இந்நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக,அந்நாட்டு அரசு டி.வி. அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை, மேற்கத்திய நாடுகள் கண்டித்து வருகின்றன. இத்திட்டங்கள் அணுஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என்று அவை அஞ்சுகின்றன. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|