| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| கனடா பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்த தீவிரவாதிக்கு ஆயுள் தண்டணை |
| [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 08:35.27 மு.ப GMT ] |
கனடா நாட்டில் பாராளுமன்றம், பங்குச்சந்தை, ராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களை, தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்ற அல்-குவைதா அமைப்பைச் சேர்ந்தவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவன் சகானா அமரா(24).கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 பேருக்கு பயிற்சி அளித்து கனடா நாட்டின் பாராளுமன்றம், பங்குச்சந்தை, ராணுவ முகாம் ஆகியவற்றின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்தான்.வாகனங்கள் நிறைய வெடிமருந்தை நிரப்பி பங்குச்சந்தை, பாராளுமன்றம், ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இருந்த சதி முறியடிக்கப்பட்டது.
இந்த சதி குறித்து, அல்-குவைதா அமைப்பைச் சேர்ந்த சகானா அமரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டொரான்டோ நீதிமன்றம், சகானா அமராவுக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது. ஆயுள் தண்டனையின் போது, ஆறரை ஆண்டுகள் பரோலில் செல்லவும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|