| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| குழந்தை குடி அகல்வோர் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார் |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:54.03 பி.ப GMT ] |
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார்.40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த, குழந்தை குடி அகல்வோர் திட்டம் என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில், ஏழைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு மேலும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதிமொழியில் அனுப்பப்பட்டனர். ஆனால், இவ்வாறு அனுப்பப்பட்ட குழந்தைகளில் பலர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளானார்கள்.
இந்தச் சம்பவம் மிகவும் அவமானகரமான விஷயம் என்று வர்ணித்த பிரவுன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறார்களது குழந்தைப்பருவம் அபகரிக்கப்பட்டது என்றார்.
இதே போன்ற ஒரு மன்னிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அவர்களும் நவம்பர் மாதத்தில் கோரினார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|