| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவுக்கு அழைப்பில்லை! |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:17.27 மு.ப GMT ] |
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தம்பதியினரின் ஒரே மகளான செல்சியாவின் திருமணம் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறுகிறது.செல்சியா, காதலரும் நிதி முதலீட்டாளருமான மார்க் மெஸ்வின்ஸ்கியை மணக்க உள்ளார். இந்தத் திருமணத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. திருமண அழைப்பிதழ் கடைசி நேரத்தில் தரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒபாமா கூறுகையில்,
'திருமணத்திற்கு நான் அழைக்கப்படவில்லை. அதற்கு காரணம், இது தங்கள் மகளுடைய, திருமணம் பற்றிய தனிப்பட்ட விஷயமாக கருதியது காரணமாக இருக்கலாம். ஒருவேளை திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு அதிபர்கள் வேண்டாமே என்று கூட அவர்கள் நினைத்திருக்கலாம்' என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
ஒபாமா மட்டுமல்ல இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் செல்சியா திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. கிளிண்டன் காலத்தில் துணை அதிபராக இருந்த அல் கோர், திரையுலகப் பிரமுகர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பார்பரா ஸ்டீரிசாண்ட் ஆகியோரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
செல்சியா - மார்க் மெஸ்வின்ஸ்கி திருமணத்திற்கு வெகுசிலரே அழைக்கப்பட உள்ளனர் என்றாலும் மகளுடைய திருமணத்தை பிரமாண்டமாக நடத்த கிளிண்டன் தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.
மன்ஹாட்டன் நகரில் இருந்து 90 மைல் தூரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் செல்சியா திருமணம் நடக்கவுள்ளது. ரூ.13 கோடியில் இருந்து ரூ.22 கோடி வரை செலவு செய்யப்படும் இத்திருமணத்திற்கு பாதுகாப்பிற்காக மட்டும் ரூ.1 கோடி வரை செலவிடப்படுகிறது. திருமணத்திற்கு வரப் போகிறவர்கள் அனைவரும் மிகப் பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்பதால் இவ்வளவு செலவு செய்யப்படுகிறது.
விருந்துக்காக சுமார் 50 ஏக்கர் இடம் அட்டகாசமாகத் தயாராகி உள்ளது.திருமணம் நடக்கும் மேடையைச் சுற்றிலும் புகழ்பெற்ற ஓவியர்களை வைத்து சுவர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
'பாட்ரிசியா நிக்ஸன் திருமணத்திற்குப் பிறகு செல்சியாவின் திருமணம்தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது' என்கின்றன திருமணங்களை ஏற்பாடுகளை செய்து தரும் அமெரிக்க நிறுவனங்கள். 'இவ்வருடத்தின் பிரமாண்டமான, முக்கிய திருமண நிகழ்ச்சியாக செல்சியாவின் திருமண நிகழ்ச்சி அமையும்' என்றும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|