| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:46.17 பி.ப GMT ] |
அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் Ron Bowes என்பவரே ஆவார்.
பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.
தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|