| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி |
| [ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:16.19 பி.ப GMT ] |
நேபாள சிறுமி அதிதி கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப் இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள்.அந்த ஆல்பத்தில் அந்நாட்டு தேசிய கீதம் உட்பட, ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அதிதி பாடியும், நடித்தும் இருக்கிறாள்.
இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு இசைக் கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். விழா மேடையில், அதிதி மூன்று பாடல்களை பாடினாள். அதிதி தந்தை உத்தாப் கூறியதாவது: அதிதி பிறந்த ஆறாவது மாதத்திலேயே பேசத் தொடங்கிவிட்டாள். அவளது சகோதரி அஸ்னா பாடுவதை கூர்ந்து கவனிப்பாள். இதனால், இசையில் அவளுக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.
அதிதி, 2 வயதிலிருந்தே பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடத்தொடங்கிவிட்டாள். தற்போது, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இசை ஆல்பம் வெளியிட்டவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிதியின் பெயர் இடம் பெறுவதற்காக இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறிய வயதில் இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்று கருதுகிறேன்.
எனவே, அதிதியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு உத்தாப் கூறினார். ஆனால், உத்தாப்பின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், மால்டோவாவில் பிறந்த ரோமானியன் பாடகர், "சிலியோபாட்ரா ஸ்டாட்ரன்', அதிதியின் தற்போதைய வயதிலேயே இசை ஆல்பம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|