ஏனைய செய்தி
ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:28.14 பி.ப GMT ]
கம்போடியாவில் 1975 - 1979 காலப்பகுதியில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணையில் அந்நாட்டின் அப்போதைய சிறை அதிகாரிக்கு ஐ.நா. நிபுணர்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட போர்க்குற்றவியல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இதேவேளை, அந்நாட்டில் அக்காலப்பகுதியில் இடம்பெற்ற மனித பேரவலத்துக்கு காரணமான - தற்போது சிறையிலுள்ள - நான்கு தலைவர்களுக்கு எதிரான விசாரணைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கம்போடிய சிறை அதிகாரி, சிறையில் சுமார் 15 ஆயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டினியால் சாவதற்கு காரணமாகியிருந்தார் என்றும் அப்போதைய அரச படைகளால் சிறைக்கு கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சி ஆதரவு மக்கள் பலர் சிறையிலிருந்து வெளிப்புறமாக கொண்டுசெல்லப்பட்டு திறந்தவெளி ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கும் துணைபோயிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டிருந்தார்.

இவருக்கு அதிக பட்சம் 35 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்று சட்டத்தரணிகளால் கோரப்பட்டிருந்தபோதும் ஏற்கனவே பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 11 வருட சிறைவாசத்தை அனுபவித்த காரணத்தினால் தீர்ப்பு 30 வருடங்களாக குறைக்கப்பட்டது.

67 வயதுடைய முன்னாள் கணித ஆசிரியராகிய டச் எனப்படும் இந்த சிறை அதிகாரிக்கு தீர்ப்பு வழங்கிய போர்க்குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழுவினால் அமைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ]
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்]
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ]
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ]
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்]
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]