ஏனைய செய்தி
மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:03.36 பி.ப GMT ]
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.

இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.

கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.

இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ]
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்]
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ]
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ]
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்]
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]