| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| டயானா கொலை?: வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 10:24.59 மு.ப GMT ] |
இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கைப் புலனாய்வு செய்துவந்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅந்நாட்டு வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட், டயானா உயிரிழக்கக் காரணமான கார் விபத்து குறித்துப் புலன் விசாரணை செய்தவர்.
இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
"கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரிஸ் பொலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்திருப்பது இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விபத்தின்போது டயானாவின் கார் சாரதியாக இருந்த போல் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டயானாவின் சாரதி போல், தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாவை முதலீடு செய்துள்ளார்.
இது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று வழக்கறிஞர் மைக்கேல் மேன்ஸ்பீல்ட் கூறியுள்ளார். இதனையடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|