பிரித்தானிய செய்தி
சொத்தில் இருந்து மைக்கேல் ஜாக்சன் தந்தைக்கு உதவிதொகை வழங்க மறுப்பு
[ சனிக்கிழமை, 23 சனவரி 2010, 05:03.34 பி.ப GMT ]
உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் (50) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதிக சக்தி வாய்ந்த போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை அவரது டாக்டர் வழங்கியதால் இறந்தார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சனுக்கு பலஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. அந்த சொத்தில் இருந்து தனக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் (81) கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தனக்கு மாத வருமானம் ரூ.76,500 (1,700 டாலர்) என்றும், மாதந்தோறும் ரூ.9 லட்சம் செலவு ஆகிறது என்றும் தெரிவித்து இருந்தார். தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுக்காக அந்த பணத்தை செலவிட்டு வருவதாக கூறியிருந்தார்.

எனவே, மைக்கேல் ஜாக்சன் சொத்தில் இருந்து தனக்கு மாதந்தோறும் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் (15 ஆயிரம் டாலர்) உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் வக்கீல் மறுப்பு தெரிவித்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தவரை அவரது தந்தை ஜோ ஜாக்சன் அவரை சார்ந்து வாழவில்லை. மைக்கேல் ஜாக்சனுடன் சண்டையிட்டு பேச்சுவார்த்தை இல்லாமல்தான் இருந்தார்.

இளமைப்பருவத்தில் மைக்கேல் ஜாக்சனை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன்தான் உயிருடன் இருந்தபோதே தனது தாய் மற்றும் தனது 3 குழந்தைகளுக்கு சொத்தில் இருந்து பணம் ஒதுக்கியுள்ளார்.

எனவே மைக்கேல் ஜாக்சனின் சொத்தில் இருந்து அவரது தந்தை ஜோ ஜாக்சனுக்கு உதவித்தொகை வழங்கக் கூடாது என கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதி மித்சேல் பெக்லாப் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]