| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை : முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 08:19.39 மு.ப GMT ] |
பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை முடிந்து விட்டதால், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கன்ராட் முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுகுறித்து இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தி,
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்தாண்டு, மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பிற்கான காரணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இது தொடர்பாக, அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறை நடத்திய விசாரணை, கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த விசாரணை அறிக்கை, ஒரு வாரத்தில், மாவட்ட அட்டர்னியிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்ட அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில்,
"மைக்கேல் ஜாக்சன் இறப்பு தொடர்பான விசாரணை முழுவதுமாக முடிவடைந்து விட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரான கன்ராட் முர்ரேக்கு எதிராக, குற்ற வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன' என்றனர். மேலும், அவர்கள், "டாக்டர் கன்ராட் முர்ரேக்கு எதிராக, கவனக்குறைவால், எதிர்பாராமல் உயிரிழப்பு ஏற்பட்டதாக, வழக்கு பதிவு செய்யப்படலாம்' என தெரிவித்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|