பிரித்தானிய செய்தி
திறந்த வெளியில் தகனம் : பிரிட்டனில் இந்து நபருக்கு சட்டப்படி உரிமை
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 12:59.01 பி.ப GMT ]
பிரிட்டனில் வசிக்கும், இந்து சமய நபர் ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையைச் சட்டப்படி வென்றுள்ளார்.
பிரிட்டனின் சட்ட விதிமுறைகளின் படி உடலங்களை எரியூட்டும் கூடங்களில் மட்டுமே தகனம் செய்ய முடியும். எனவே 71 வயதான தேவாந்தர் காய் என்பவர், தான் இறந்த பிறகு தனது உடல் திறந்த வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை அவரது உள்ளூராட்சி அதிகார சபை மறுத்துவிட்டது.

எனினும் தனது முயற்சியை தேவாந்தர் காய் கைவிடவில்லை. தொடர்ந்து வாதிட்டார்.

ஒரு நல்ல மரணத்துக்கும், இறந்த பிறகு தனது ஆன்மா உடலில் இருந்து விடுபட்டுச் செல்லவும் திறந்த வெளி தகனம் மிகவும் அவசியம் என்று அவர் வாதிட்டார். வழக்கிலும் வென்று அதற்கான உரிமையை வென்றுள்ளார்.

இது தொடர்பான சட்டத்தில் தெளிவைப் பெறவே தான் வழக்கை தொடுத்தாக அவர் கூறினார்.
 
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]