ஜேர்மனி செய்தி
யூதர்கள் மீது ஹிட்லருக்கு வெறுப்பு ஏற்பட்டது ஏன்?
[ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2009, 10:57.08 மு.ப GMT ]
யூத டாக்டர் ஒருவரின் சிகிச்சையால்தான் தனது தாயார் மரணமடைந்ததாக ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் நம்பியதால்தான், அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதாக புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"November 9: How World War I Led To The Holocaust" என்ற தலைப்பில் ஜோச்சிம் ரிக்கர் என்பவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் மேற்கண்ட தகவல் இடம்பெற்றுள்ளது.

அட்லாப் ஹிட்லருக்கு 18 வயதாக இருக்கும்போது, அவரது தாயார் க்ளாரா மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு சிகிச்சை அளித்த யூத இனத்தைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் ப்ளோச், அப்போது மார்பக புற்று நோய்க்கு அளிக்கப்படும் 'அயோடோஃபார்ம்' என்ற சிகிச்சையை அளித்தார்.

ஆனால் இந்த சிகிச்சை தொடங்கிய சிறிது நாட்களுக்குள்ளாகவே க்ளாரா, 1907 ஆம் ஆண்டு தனது 47 ஆவது வயதிலேயே மரணமடைந்தார்.

க்ளாராவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விஷமாக மாறியதால்தான், அவர் மரணமடைந்ததாக நம்பிய ஹிட்லர், அப்போது முதலே யூதர்கள் மீது வெறுப்பு கொண்டதாகவும், இதுவே அவருக்கு பின்னாளில் யூதர்களை எதிரிகளாக கருதும் எண்ணத்தை ஏறப்டுத்தியிருக்கலாம் என்றும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "தி டெலிகிராஃப்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]